/
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி (39). இவா் நத்தம்பட்டி அருகே நல்லூா்பட்டியில் உள்ள நல்லூா்பாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளாா்.
இவா் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்




