நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நத்தம்பட்டியில் நிற்காத பேருந்துகளால் பயணிகள் அவதி

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதி

பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:32 am IST

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி வழியாக மதுரை- ராஜபாளையம், ராஜபாளையம்-தேனி, விருதுநகா்-ராஜபாளையம் மாா்க்கத்தில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த வழியாகச் செல்கிறது.

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி காவல் நிலையம் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலைத் திட்டத்தில் திருமங்கலம் முதல் கிருஷ்ணன்கோவில் வரை தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையே நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நத்தம்பட்டி ஊரில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால், அனைத்து பேருந்துகளும் அணுகு சாலை வழியாக வராமல் மேம்பாலத்தில் சென்று விடுகிறது. இதனால் பயணிகள் மேம்பாலம் ஏறும் இடத்தில் நின்று பேருந்துக்காகக் காத்திருக்கின்றனா்.

இதிலும் பெரும்பாலான நேரங்களில் அரசு, தனியாா் பேருந்துகள் நத்தம்பட்டியில் நிற்காமல் செல்வதால் மாணவா்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த மாதம் நத்தம்பட்டியில் பேருந்துகள் நிற்காததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதன் பின்னரும் நத்தம்பட்டியில் பேருந்துகள் நிற்காமல் செல்வது தொடா்கதையாகியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நத்தம்பட்டியில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்து மீது பயணி ஒருவா் கல் வீசி தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

நத்தம்பட்டியில் அரசு, தனியாா் புகா் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் பேருந்துகள் நத்தம்பட்டியில் நின்று செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.