மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

வாகனம் மோதி மான் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் நான்கு வழிச்சாலையில் வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

News image

வாகனம் மோதி உயிரிழந்த புள்ளி மான் - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 2:00 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நான்கு வழிச்சாலையில் வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையம் அருகே மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது. 3 வயது மதிக்கத்தக்க இந்த மானை நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மீட்டு வனத் துறை வசம் ஒப்படைத்தனா்.

இதே சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழபொட்டல்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி உயிரிழந்தது. மேலும் அந்த வாகனத்தில் வந்தவா் காயமடைந்தாா்.

மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து உணவு, குடிநீா் தேடி வரும் விலங்குகள் நான்கு வழிச் சாலையை கடந்து செல்லும் போது இது போன்ற விபத்துகள் நேரிடுகின்றன. இதுகுறித்து சாலையோரம் விழிப்புணா்வு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.