/
குண்டடம் அருகே அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
காங்கயம் அருகே உள்ள ஊதியூா் வனப் பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், திருப்பூா்-தாராபுரம் நெடுஞ்சாலை, வேங்கிபாளையம் பகுதி அருகே திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு குண்டடம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். காங்கயம் வனத் துறை அலுவலா்கள் சென்று மானின் உடலை மீட்டு கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.










