புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போருக்குத் தயாராகியிருக்கிறாள்! 

'ராஜா ராணி' தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து மணந்தார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2020, 12:46 pm

ஸ்ரீ


'ராஜா ராணி' தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து மணந்தார். ஆல்யா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில்தான் ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 1.9 மில்லியனைத் தொட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளார் ஆல்யா . டிவி நடிகை ஒருவருக்கு இத்தனை ஃபாலோயர்கள் இருப்பது இதுவே முதல்முறை என சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்படுகிறதாம்.

இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில், ""நாங்கள் எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்ததில் எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால், இந்த மகிழ்ச்சியை கொண்டாடுகிற மனநிலை இப்போது இல்லை. காரணம், உலகமே கரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழல்தான். இதைப் போர் என்று சொல்வது தவறே இல்லை. பிறந்த அடுத்த நொடியிலேயே இந்தப் போருக்குத் தயாராகியிருக்கிறாள் எனது மகள்'' என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.