காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சின்னத்திரை மின்னல்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நாயகி' தொடரில், ஆனந்திக்கு தோழியாகவும் "பாண்டவர் இல்லம்' தொடரில் நாயகி கயலாகவும் நடித்து வருபவர் நடிகை பப்ரி கோஷ். கொல்கத்தாவில் பிறந்த இவர். 2009-ஆம் ஆண்டு

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 12:52 pm

ஸ்ரீ

ஓவியம் வரைவது பிடிக்கும்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நாயகி' தொடரில், ஆனந்திக்கு தோழியாகவும் "பாண்டவர் இல்லம்' தொடரில் நாயகி கயலாகவும் நடித்து வருபவர் நடிகை பப்ரி கோஷ். கொல்கத்தாவில் பிறந்த இவர். 2009-ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பெங்காலி படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய "டூரிங் டாக்கீஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து, "பைரவா', "சக்கப் போடு போடு ராஜா', "சர்கார்', "விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக "சர்கார்' படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் தமிழ் சின்னத்திரையில் பப்ரிக்கு வாய்ப்பு வந்ததாம். முதலில், நெகட்டிவ் கேரக்டருக்காக ஆடிஷன் வைத்தார்களாம். பின்னர் கண்மணி கேரக்டருக்கு ஏற்கெனவே தேர்வாகியிருந்தவர் திடீரென ரிஜெக்ட் ஆக, அந்த வாய்ப்பு பப்ரிக்கு கொடுத்து, கதாபாத்திரத்தில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறார்கள். பப்ரிக்கு மாடலிங் செய்வது தான் பொழுது போக்காம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைவது பிடிக்குமாம். அசைவ உணவுகள் அதுவும் பெங்காலி உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம்.


ஆசிரியராக ஆசை!

Story image

விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் "அரண்மனைக் கிளி'. இதில் கதாநாயகியாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் மோனிஷா நடித்து வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால். இவருக்கு ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பல ஆர்மிகளை வைத்திருக்கிறார்கள்.

மோனிஷாவின் பூர்விகம் கேரளா. கல்லூரி படிப்பு முடித்தவுடனே மலையாள தொடர் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது திரைத்துறைக்குள் அறிமுகமானர். இதற்கிடையில் மாடலிங்கும் செய்து வந்தார். தொடரில் அவர் அணியும் அனைத்து ஆடைகளையும் இவரது மாமியார் தான் தேர்ந்தெடுத்து கொடுப்பாராம். பி.எட் முடித்துள்ள மோனிஷா நடிக்க வராமல் இருந்திருந்தால் ஆசிரியை ஆகியிருப்பாராம். மோனிஷாவுக்கு பயணம் என்றால் கொள்ளை பிரியமாம்.


விழிப்புணர்வு கதைகளில் நடிக்க வேண்டும்!

Story image

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் திவ்யா கனேஷ். சின்னத்திரையில் வி.ஜேவாக அறிமுகமானவர் சன்டிவியில் ஒளிபரப்பான "கேளடி கண்மணி' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சின்னத்திரை நடிகையானார்.

அதன்பிறகு, "விண்ணைத்தாண்டி வருவாயா', "லட்சுமி வந்தாச்சு', "சுமங்கலி' என ஒரே நேரத்தில் மூன்று தொடர்களில் சென்டிமெண்ட், வில்லி, குணசித்திர வேடம் என மூன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தமிழ் சின்னத்திரை உலகில் பிஸியான நடிகையானார்.

தற்போது "மகராசி' தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யாவுக்கு பூர்வீகம் ராமநாதபுரம். திவ்யா பெரியதிரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். இது குறித்து திவ்யா கூறுகையில், ""நிறைய மாடலிங் செய்ய வேண்டும் என்ற ஆசையில்தான் மீடியாவுக்குள் வந்தேன். ஆனால் பாதை சற்று மாறி நடிகையாகிவிட்டேன். ஆனால், நடிக்க வந்த இந்த குறுகிய காலத்தில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. வருங்காலத்தில் பொழுதுபோக்குகாக நடிக்கிற கதாபாத்திரங்களாக இல்லாமல், ஏதாவது வகையில் கருத்து சொல்கிற அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது'' என்றார்.

கை கொடுத்த சின்னத்திரை!

Story image

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "உயிரே' தொடரின் நாயகியாக நடித்து வரும் பவித்ராவின் நிஜப்பெயர் மனிஷாஜித். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் இவரது சொந்த ஊர். சிறுவயதிலேயே சரத்குமார் நடித்த "கம்பீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து 45 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பிறகு, 2013-இல் "நண்பர்கள் கவனத்திற்கு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழில் பத்து படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இருந்தாலும், பெரியதிரை அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை தராததால், சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவர், எதிர்பார்த்தது போல தற்போது "உயிரே' தொடர் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க மகிழ்ச்சியாகிவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.