முதன்முதலாக நட்டுவாங்கம் செய்த பெண்மணி!
இன்று நாட்டிய உலகில் பெண்களே நட்டுவாங்கம் செய்வது சகஜமாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் முன்னோடி காமுக்கண்ணம்மாள். ஆண்கள் மட்டுமே நட்டுவநர்களாக இருந்த மரபை முறித்து மேடையில் முதல்


இன்று நாட்டிய உலகில் பெண்களே நட்டுவாங்கம் செய்வது சகஜமாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் முன்னோடி காமுக்கண்ணம்மாள். ஆண்கள் மட்டுமே நட்டுவநர்களாக இருந்த மரபை முறித்து மேடையில் முதல் நட்டுவாங்கம் செய்தவர் இந்த அம்மையாரே ஆவார், 1945 -இல் தன் மாணவியரில் மோகனா என்பவரின் அரங்கேற்ற நிகழ்ச்சியில் மேடை மீதமர்ந்து கைகளில் தாளமேந்தித் தட்டி ஒரு புரட்சியைச் செய்தவர் இவர். பல பழைமைவாதிகளின் புருவங்கள் அப்போது நெறிபட்டன.
தேசிய உணர்வு காமுக் கண்ணம்மாளுக்கு அதிகம். அவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி அரசியல் ஈடுபாடு கொண்டார். நகரின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர முழக்கத்தோடு பிரசாரங்கள் செய்வதிலும் அவர் முனைந்தார்.
நகரசபைத் தேர்தல் வந்தபோது வேட்பாளராக நிற்குமாறு கட்சியின் தலைமை அவரை அழைத்தபோது, காமுக்கண்ணம்மாள் எனக்கு எவ்விதப் பதவியும் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார். வேறொருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அவரது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் பாடுபட்டார். உறங்கும் நிலையில் கூட மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள் என்று அவர் கோஷமிட்டதுண்டு. அந்தக்காலகட்டத்தில் மஞ்சள் பெட்டி என்பது காங்கிரஸின் சின்னமாக இருந்தது.
உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது கட்சியின் பிரமுகர்கள் பொருளுதவி கோரி வீதிகளிலெல்லாம் ஊர்வலம் வந்தனர். காமுக்கண்ணம்மாள் தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் அதற்குக் கொடுத்துவிட்டார். அத்துடன் நில்லாது உறவினர்களிடமிருந்தும் நகை பணம் முதலியன வசூலித்துக் கட்சிக்குக் கொடுத்தார்.
கதராடையை மட்டுமே காமுக்கண்ணம்மாள் உடுப்பதென்ற வைராக்கியம் கொண்டிருந்தார். ஓய்வு நேரங்களில் அவரைப் பார்த்தால் சாட்டையும், கையுமாகக் காட்சி தருவார். இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் தன் சொந்தச் செலவில் ஒரு வெற்றிவிழாவை அவர் விமர்சையாக நடத்தினார்.
காமு கண்ணம்மாள், தஞ்சாவூர் உபேந்திரன் தாயார் ஆவார்.
(திருவாரூர் - தஞ்சை இசை வேளாளர் மாநாட்டு மலரிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...