தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நோய்களை தடுக்கும் ஓமம்!

நோய்க்கிருமிகள் உடலில் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. ஓமத்தில் இலைகள், விதைகள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 12:07 pm

ஆர்.கே. லிங்கேசன்

நோய்க்கிருமிகள் உடலில் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. ஓமத்தில் இலைகள், விதைகள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. ஈக்குச்சி போல் இருப்பார்கள். எவ்வளவு சத்துகள் நிறைந்த உணவினை உண்டாலும் தேறாது. சிலர் குண்டாக இருப்பார்கள் உடலில் வலிமை இருக்காது. இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வர உடல் வலிமை பெறும்.

வயிற்றுவலி, வயிற்றுப் பொருமலால் அவதிப்படும் சிறியவர்களோ, பெரியவர்களோ நூறு கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட பாதிப்புகள்
பரிபூரணமாக அகலும்.

அஜீரணக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கும் இது கைகண்ட மருந்து. சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, திப்பிலிவேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பரிபூரண குணம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.