சின்னத்திரை மின்னல்கள்!
சன் தொலைகாட்சியின் தொகுப்பாளரான தியா மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் இத்தாலி பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.


தியாவின் நம்பிக்கை!
சன் தொலைகாட்சியின் தொகுப்பாளரான தியா மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் இத்தாலி பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், தியா மேனன் கடந்த ஆண்டு இதே நாளில் இத்தாலியில் தான் இருந்ததாகவும் இப்போது இத்தாலியின் நிலை கண்டு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.""கரோனா தற்போது வரை இத்தாலியில் கிட்டதட்ட 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரை பறித்துள்ளது. உலகிலே மகிவும் பாதித்த நாடாக இத்தாலி பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நான் கடந்த வருடம் இதேநாளில் இத்தாலிக்கு சுற்றுலா சென்ற போது மிகவும் சந்தோஷமாக இருந்தேன். உலகிலேயே இத்தாலி மிக அழகான நாடு. இத்தாலிக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என அப்போது நினைத்துக் கூட பார்க்கவில்லை.
கரோனா பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய பிரார்த்தனை இத்தாலி மற்றும் இந்தியாவை காப்பாற்றும் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
படிப்பில் கவனம் செலுத்தும் வித்யா!
சின்னத்திரை தொடர், திரைப்படம் என பிசியாக இருந்தாலும். மற்றொருபுறம், பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு, ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டத்துக்காக படித்துக் கொண்டிருப்பவர் "நாயகி' தொடரின் நாயகி வித்யா பிரதீப். இந்த ஊரடங்கு நாள்கள் குறித்து இவர் கூறியுள்ளதாவது, தற்போது, படங்கள், சீரியல் ஷூட்டிங் எல்லாம் இல்லாததால், வீட்டு வேலைகள் செய்றது, வொர்க்கவுட் பண்றது, படங்கள் பார்க்குறது இதற்கிடையில் என்னோட ஆராய்ச்சி படிப்பு தொடர்பான வேலைகள் செய்வது என நேரம் சரியாக இருக்கிறது. கடந்த 5 வருஷமா என்னோட பி.எச்.டி படிப்பு சம்பந்தமான வேலையும் போய்கிட்டு இருக்கு. இடையில் படங்கள், சீரியல், விளம்பரங்கள்னு பிஸியாகிட்டதால இந்த நாள்களில்தான் மறுபடியும் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துகிறேன். ரிசர்ச் எல்லாம் முடிஞ்சு பேப்பர் வொர்க்கும் வேற சில வேலைகளும் மட்டும் மிச்சம் இருக்கு. இந்த வருஷம் கண்டிப்பாக முடித்து விடுவேன் என நம்புகிறேன்.
வெளியே போகாம இருக்குறதும், நம்மைத் தனிமைப்படுத்துவதும் இந்த நேரத்தில் நாம செய்ய வேண்டிய கடமை. இதெல்லாம் நமக்கு வராது என்று அசட்டுத் தைரியமாக இருப்பது ரொம்பத் தப்பு. பெரியவங்க, குழந்தைங்க ரொம்ப பத்திரமா இருக்கணும். ஏன்னா, அவங்களுக்கான எதிர்ப்பு சக்தி ரொம்பக் குறைவு. இதை கவனத்தில் வைத்து கடைப்பிடித்தால் இந்த அசாதாரண நாள்கள், சீக்கிரமே சரியாகிடும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...