நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
எனவே, நமக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி இருந்தாலும், இல்லையென்றாலும் அனைவரும் முகக் கவசங்களை அணிந்து கொள்வது நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். அதே சமயம் மக்கள் அனைவருக்கும் முகக் கவசம் கிடைப்பதில் பற்றாக்குறை இருப்பதால், முடிந்த வரை அவரவர்களுக்கான முகக் கவசங்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவரவரே தயாரித்து அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
முகக் கவசம் தயாரிப்பதற்கான செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
சுத்தமான 100 சதவிகிதம் காட்டன் துணியில் இரண்டு அடுக்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் முகக் கவசம் நோய் தோற்றிலிருந்து நம்மை கூடுதலாகப் பாதுக்காக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தேவையான பொருட்கள்: சுத்தமான பழைய காட்டன் துணி (பனியன் அல்லது டி சர்ட்) எடுத்துக் கொள்ளலாம். உப்பு சேர்த்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் வைத்திருந்து எடுத்து நன்கு உலர்த்திய பின்னர் உபயோகப்படுத்தவும்.
பெரியவர்களுக்கு: 9 இன்ச் x7 இன்ச்
சிறியவர்களுக்கு : 7இன்ச் x 5 இன்ச்
மாஸ்க்கை கட்டுவதற்கான கயிறு தயாரிக்க: நான்கு மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொண்டு அதனை துணிகளுக்கு பைப்பிங் தைக்கும் முறையில் தைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு துண்டுகள் } 1.5 இன்ச் ஷ் 5 இன்ச் மற்றும் இரண்டு துண்டுகள் } 1.5 இன்ச் x 40 இன்ச்
செய்முறை: வெட்டப்பட்ட துணியை எடுத்து, துணியின் முனையில் கயிறுக்காக தைத்து வைத்துள்ள 1.5x5 இன்ச் துண்டை இணைக்கவும். பின்னர், கவசத்துக்கான துணியை ஒவ்வொன்றும் சுமார் 1.5 இன்ச் இருக்கும்படி கீழ்நோக்கி மடித்து தைக்கவும். இதுபோன்று மூன்று பிளேட்களை
உருவாக்கவும்.
பின்னர், பளபளப்பான துணியை மறுபுறம் திருப்பி, மடிப்புகளைத் தேய்த்துவிடவும். ப்ளீட் செய்யப்பட்டவுடன், உயரம் 9இன்சிலிருந்து 5 இன்ச்சாக குறையும். பின்னர் கீழ்ப்பகுதியில் இருபுறமும் 1.5 x 40 இன்ச் கயிற்றை முக கவசத்துடன் இணைக்கவும். இப்போது முகக் கவசம் தயார்.
குறிப்பு: தையல் மிஷன் இல்லாதவர்கள், ஊசி -நூல் கொண்டு கையாலும் தைத்துக் கொள்ளலாம். இதுபோன்று வீட்டில் தயாரிக்கும் முகக் கவசத்தை வெதுவெதுப்பான வெந்நீரில் சோப்புக் கொண்டு துவைத்து நன்கு சூரிய ஒளிப்படும் இடத்தில் 5 மணி நேரம் காய வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


