குழந்தைகளுக்கு பொம்மைகள் மிகவும் பிடிக்கும். அதற்காக கண்ட கண்ட பொம்மைகளை வாங்கிக் கொடுத்துவிடக் கூடாது. அறிவு வளர்ச்சிக்கும் பொழுது போக்கிற்கும் பாதுகாப்பிற்கும் ஏற்றதாக பொம்மைகள் இருக்க வேண்டும்.
எந்த ஒரு பொம்மையும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது. கூர்மையானவையாக, குழந்தைகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் விதத்திலானதாக இருந்துவிடல் ஆகாது.
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு அடர்த்தியான வண்ணங்களால் ஆன பொம்மைகள் ஏற்றது. அவை குழந்தைகளை அதிகம் வசீகரிக்கும்.
டேப் ரிக்கார்டர்களிலிருந்து லேசாக வெளிப்படும் இசையையும் குழந்தைகள் ரசிக்கும். அதனால் இசையை வெளிப் படுத்தும் பொம்மைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். அதேசமயம், அந்த பொம்மைகள் குழந்தைகளின் செவிப் புலன்களைச் சேதப்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது.
6 மாதம் முதல் 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு கனம் குறைந்த பந்து, கப், டெலிபோன் பொம்மை போன்றவைகளை விளையாடுவதற்குக் கொடுக்கலாம்.
ஒரு வயது முதல் இரண்டு வயதிலான குழந்தைகளுக்கு கலர் படங்கள் நிறைந்த புத்தகம். கனம் குறைந்த மரப்பொம்மை, ஓடும் கார்கள், சிறிய சைக்கிள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.
2 வயதிற்கும் 3 வயதிற்கும் இடையிலான குழந்தைகளுக்கு பசிள்ஸ் கட்டைகளை வாங்கிக் கொடுத்து , அவைகளைப் பொருத்தவும், வீடு, கட்டடங்கள் உருவாக்கவும் ஆர்வப்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மன வளர்ச்சி அதிகரிக்கும்.
குழந்தைகள் பேப்பரில் பேனா மூலம் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருந்தால், அப்படியே விட்டு விடுங்கள். குழந்தைக்கு சிந்தனை வளர்ந்து கொண்டிருப்பதாக அர்ததம்.
( எஸ். லட்சுமிவேலு எழுதிய குழந்தை வளர்ப்பு (தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை) என்ற நூலிலிருந்து )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


