கதம்பம்

"குழந்தையும் சிலேட் பலகையும்' என்ற உலகப் புகழ் பெற்ற குழந்தைகள் இலக்கிய நாவலை எழுதிய அமெரிக்க நாவலாசிரியை கிரேஸ் அப்பட், அந்த நாவலை சிலேட்டிலேயே எழுதி, அச்சுக்குக் கொடுத்து புத்தகமாக 

சிலேட்டில் நாவல் எழுதியவர்!

"குழந்தையும் சிலேட் பலகையும்' என்ற உலகப் புகழ் பெற்ற குழந்தைகள் இலக்கிய நாவலை எழுதிய அமெரிக்க நாவலாசிரியை கிரேஸ் அப்பட், அந்த நாவலை சிலேட்டிலேயே எழுதி, அச்சுக்குக் கொடுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.
 

முதல் பெண் தட்டச்சர்!


1885-ஆம் ஆண்டில் உலகில் முதன்முதலாக டைப் ரைட்டரை பயன்படுத்தியவர் லியோ டால்ஸ்டாய். அவர் தனது மகளையும் தட்டச்சு பயிலச் செய்து தனது படைப்புகளையும், கடிதங்களையும் மகளிடம் கொடுத்து டைப் செய்யச் சொல்வார். ஆக, அவரே உலகின் முதல் பெண் தட்டச்சர்.

பிறந்தநாள் பாடல் பிறந்த கதை!


பிறந்தநாள் அன்று "ஹேப்பி பர்த் டே டூ யூ' என்ற பாடலைப்பாடும் வழக்கம்
உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பாட்டை 1893- ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பெட்டி ஹில், மில்ட் ரெட் என்ற இரண்டு சகோதரிகள் இயற்றினார்கள்.

- அ.யாழினி பர்வதம், சென்னை.


வானவில் நிலையம் !


மூன்றாம் பாலினத்தவர்களின் வளர்ச்சிக்காகவும், அவர்கள் பொது மக்களுடன் சேர்ந்து புழங்கவும் வாய்ப்பளிக்கும் வகையில் தில்லி, நொய்டாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று முழுவதுமாக திருநங்கைகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மெட்ரோ நிலையத்திற்கு "ரெயின்போ' நிலையம் எனப் பெயர் சூட்டிள்ளனர். இதில் ஆறு திருநங்கைகளை ஊழியர்களாக நியமித்துள்ளனர்.

ஏற்கெனவே நொய்டாவில் இருக்கும் இரண்டு மெட்ரோ நிலையங்களில் பெண்களை மட்டுமே பணியில் சேர்த்து "பிங்க்' நிலையமாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- ரிஷி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com