ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சமையல் சமையல்!

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்

News image
Updated On :16 டிசம்பர் 2020, 12:30 am

தொண்டி முத்தூஸ்


ரோல் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ
கேரட், முள்ளங்கி,
முட்டைகோஸ் துருவல் - தலா ஒரு கிண்ணம்
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
புதினா - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

Story image

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.

குறிப்பு: குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு இப்படிச் செய்து கொடுத்தால், கையில் வைத்தபடியே சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

பருப்புத் துவையல்

Story image


தேவையானவை:

துவரம் பருப்பு - 100 கிராம்
கொள்ளு - 4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - 6
காய்ந்த மிளகாய் - 1
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

துவரம்பருப்பு, கொள்ளு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை எண்ணெய்யில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: கொள்ளு இடுப்புக்கு பலம் தரும். சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கலாம். சூடான சாதத்தில் நெய், பருப்புத் துவையல் சேர்த்துப் பிசைந்து உண்டால். சுவை அருமையாக இருக்கும்.

ட்ரைஃப்ரூட் சப்பாத்தி

Story image


தேவையானவை:

கோதுமை மாவு - கால் கிலோ
பேரீச்சம்பழம் - 4
பாதாம், முந்திரி - தலா 6
பிஸ்தா,
உலர்ந்த திராட்சை - தலா 10
நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பேரீச்சம்பழம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சையை ஊற வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் உரிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து பிசையவும். இதனை சப்பாத்தியாக இட்டு, இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: இது, புரோட்டீன் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுக்கலாம்.


புரோட்டீன் சுண்டல்

Story image


தேவையானவை:


பாசிப்பயறு, கொண்டைக்கடலை,
கொள்ளு, வேர்க்கடலை - தலா ஒரு கிண்ணம்
கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு கிண்ணம்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கிண்ணம்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முளைகட்டிய நான்கு பயறுகளையும் (வேர்க்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு, பாசிப்பயறு) உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து, மிக்ஸியில் பொடித்ததைச் சேர்த்து, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்துமல்லி சேர்த்துக் கலக்கிக் கொடுக்கவும்.

குறிப்பு: இது புரோட்டீன் சத்து நிறைந்தது. கேரட், வெள்ளரி சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.