கதம்பம்!
""எல்லோரும் வரும் 2021 - ஆம் ஆண்டு மீண்டும் திருப்பத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


""எல்லோரும் வரும் 2021 - ஆம் ஆண்டு மீண்டும் திருப்பத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் பொது முடக்கத்தின்போதே என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கிவிட்டேன். கடந்த ஆண்டுகளில் நான் நிறைய கவிதைகளை எழுதியுள்ளேன். என்னுடைய மனதில் தோன்றிய எண்ணங்களை கவிதைகளாக எழுதுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய தந்தை கமல்ஹாசன் தான். இதில் பல கவிதைகள் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஆன உறவை விவரிப்பதாகும். இந்த கவிதைகளை "எட்ஜ்' என்ற தலைப்பில் இசை ஆல்பமாக வெளியிட உள்ளேன். நேரத்தை வீணாக்குவதைவிட நமக்கு சாதகமாக பயன்படுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்'' என்கிறார் ஸ்ருதிஹாசன்.
- அருண்

பதினைந்து வயதாகும் கீதாஞ்சலி ராவ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பெற்றோருடன் வசித்து வரும் இவர் "கைன்ட்லி' என்ற செல்போன் செயலியைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்த செயலி ஆன் லைன் துன்புறுத்தல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டு, செல்போன் உபயோகிப்பாளர்களை எச்சரிக்கிறது. இது தவிர, நீரில் கலந்துள்ள மாசைக் கண்டுபிடிக்கும் "எடத்திஸ்' என்ற கருவியையும் கண்டு பிடித்திருக்கிறார்.
கண்டுபிடிப்புகள் தவிர போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்கும் வகையில் பிரசாரத்திலும் ஈடுபட்டு அமெரிக்கர்களை வியப்பிலாழ்த்தி வருகிறார். இவ்வகையான காரணங்களுக்காக அமெரிக்காவின் 2020 - ஆம் ஆண்டின் சிறந்த குழந்தை என்ற விருதினை வழங்கி "டைம்' இதழ் கவுரவித்திருக்கிறது, அதன் அட்டையிலும் கீதாஞ்சலி ராவ் படத்தை வெளியிட்டு "கிட்ஸ் ஆஃப் தி இயர் -2020' என்று பாராட்டியிருக்கிறது.
""என்னால் இந்த சாதனையை நிகழ்த்த முடியுமெனில் மற்றவர்களாலும் இது முடியும்'' என்று மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறார் கீதாஞ்சலி.
- அபி

""பொது முடக்கம் பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டாலும், இன்னும் நாம் இதிலிருந்து நல்ல பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை. மக்கள் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவதை பிரச்னையாக கருதுகிறார்கள். படித்தவர்களோ கரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.
சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது, கைகளை சுத்தம் செய்வது போன்றவைகளை புறக்கணிக்கின்றனர். படப்பிடிப்பின்போது என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் மாஸ்க் அணியாமல் வேலை பார்த்தாலும், என்னுடைய பாதுகாப்புக்காக நான் மாஸ்க் அணியாமல் படப்பிடிப்புக்குச் செல்வதில்லை. காமிரா முன்பு நடிக்கும்போது மட்டும் மாஸ்க் அணிவதில்லை. மக்களிடையே இது குறித்து இன்னும் விழிப்புணர்வு தேவை'' என்கிறார் "துர்காவதி' படத்தின் நாயகி பூமி பட்னேகர்.

டென்னிஸ் உலகில் தனக்கான தனி முத்திரையை பதித்து வருகிறார் இகா ஷ்வியாடெக். அண்மையில் நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார் இகா. போலாந்து நாட்டைச்சேர்ந்த இகா தான் 2020-ஆம் ஆண்டின் டென்னிஸ் உலகின் நாயகி.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்கேற்ற முதல் தடவையே பட்டம் வென்றிருக்கும் இகாவின் சாதனை அளப்பரியது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் போட்டி தொடங்கி இறுதிப் போட்டிவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார். அதுவும் தரவரிசையில் 54-வது இடத்தில் இருந்த இகா, 4-வது இடத்திலிருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனினை நேர் செட்டுகளில் வீழ்த்தி, டென்னிஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றவர் இகா. அதுமட்டுமில்லாமல் இளையோர் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றவர். பெருங்கனவுகளுடனும், கடின உழைப்புடனும் வலம் வரும் இகா ஷ்வியாடெக் எதிர்காலத்தில் டென்னிஸ்உலகின் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை!
- ரிஷி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...