ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எட்டும் பரதம்!

பரத நாட்டியம் நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தக்கூடிய கலையாகும். இக்கலையை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிற்சியும் பெற்று அரங்கேற்றமும் செய்வார்கள்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 12:30 am

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்



பரத நாட்டியம் நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தக்கூடிய கலையாகும். இக்கலையை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயிற்சியும் பெற்று அரங்கேற்றமும் செய்வார்கள். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் ஏழைகளும் பரதம் கற்று பட்டம் பெறலாம் என சூரியா சத்யன் என்பவர் ஏழை மாணவிகளுக்கு பரதத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்.

Story image

இது குறித்து சூர்யா சத்யன் கூறும்போது,""2006-ஆம் ஆண்டு நான் "ருத்ராலயா' நாட்டியப்பள்ளி என்ற பெயரில் 20 மாணவிகளுடன் தொடங்கினேன். இன்று என்னிடம் 100 மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள ஏழை மாணவிகளும் பரதம் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் மாத கட்டணம் ரூ. 200 மட்டுமே வாங்குகிறேன். இந்த மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலம் சான்றிதழ் படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவைகளுக்குத் தயார் செய்து அனுப்பி வைக்கிறேன்.

தேர்வு கட்டணம் செலுத்த இயலாத மாணவிகளுக்கு நானே தேர்வு கட்டணம் செலுத்திவிடுவேன். இந்த ஆண்டு மொத்தம் 45 மாணவிகளை தேர்வுக்கு அனுப்பியுள்ளேன். இதில் 6 பேர் பட்டம் பெறுவதற்கான தேர்வு எழுதச் செல்கிறார்கள். தொடக்கத்தில் பயிற்சி பெறும் மாணவிகள், பாதத்தின் வலிபோக வீட்டிற்கு சென்றதும் காலில் தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அரிசி கழுவிய நீரை சற்று சூடாக்கி ஊற்றச் சொல்வேன்'' என்றும் குறிப்பிடுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.