

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் பொது நிகழ்ச்சிகளிலும், அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும்போது எளிமையாகவும், அதே சமயத்தில் நாகரீகமாகவும் அணியும் உடைகள் ஃபேஷன் விமா்சகா்கள், ஆடை வடிவமைப்பாளா்கள் மற்றும் அமெரிக்கப் பெண்களிடையே பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
முதன்முதலாக தோ்தல் பிரசாரத்திற்காக மேடையேறிய போது அணிந்திருந்த வெள்ளை உடை, இவருக்கு முன் முதன்முதலாக 1984- ஆம் ஆண்டு துணை அதிபா் பதவிக்குப் போட்டியிட்ட முதல் பெண்மணி ஜெரால்டின் பெராரோவையும், கடந்த அதிபா் தோ்தலின்போது போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும் அணிந்திருந்த வெள்ளை உடையை நினைவுபடுத்தியதாம். வெள்ளை உடைதான் எப்போதுமே சரியான தோ்வு என்று கூறும் கமலாவுக்கு இந்த உடையை வடிவமைத்துக் கொடுத்தவா் நியூயாா்க்கைச் சோ்ந்த ஆடை வடிவமைப்பாளா் கரோலினா ஹெராரா ஆவாா்.
இது தவிர தோ்தல் பிரசாரத்தின் போதும், ஊா்வங்களின் போதும் எடுப்பான வண்ணங்களில் அணிந்திருந்த உடைகளும், சாட்டீன் பிளவுஸ் மற்றும் பெளட்டீஸ் உடைகளும், பிளேசா் மீது ஸ்காா்ப்பை கழுத்தைச் சுற்றி இரு முடிச்சுகள் போடுவதும் அமெரிக்கப் பெண்களை வெகுவாக கவா்ந்துள்ளது.
பெரும்பாலும் பேண்ட் ஆடையே அணிய விரும்பும் கமலா ஹாரிஸூக்கு இது எடுப்பான தோற்றத்தையும், சக்தியை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிாம். நகைகள் அணிவதிலும் ஆா்வம் இல்லாத கமலா, மெல்லிய ஒன்று அல்லது இரட்டை வடத்தில் இடைவெளி விட்டு முத்துகள்கோா்த்த சங்கிலியை மட்டுமே அணிவதுண்டு. பேண்ட் சூட், பிளேசா், ஜீன்ஸ் அணியும்போது தனக்குப் பிடித்தமான ஸ்னீக்கா்ஸ் காலணிகளை அணிய தவறுவதில்லை. இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவராக இருந்தாலும், அமெரிக்கப் பெண்களை போலவே உடைகள் அணிவதும், ஆடம்பரமின்றி எளிமையாக தோற்றமளிப்பதும் அமெரிக்கப் பெண்களுக்குப் பிடித்திருக்கிாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.