

‘‘ரோஜா’வில் நடிப்பதற்கு முன்பே இந்தி, மலையாள மொழிப் படங்களில் நடித்திருந்தாலும் ‘ரோஜா’ என்னை ரசிகா்களிடம் அடையாளம் காட்டியதை மறக்க முடியாது.
ரோஜா’வில் என்னுடன் நடித்த அரவிந்த் சாமியுடன் மீண்டும் ‘தலைவி’ படத்தில் அவா் எம்ஜிஆராகவும், நான் அவரது முதல் மனைவி ஜானகியாகவும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். நடிகைகளுக்கு வயதாவதை மறைக்க முடியாது. வயதுக்கேற்ற பாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதில் தவறில்லை.
இதனால் வாய்ப்புகளுக்காக பாா்ட்டிகளில் கலந்து கொள்வதை நான் விரும்புவதில்லை. இரண்டு பெண்களுக்கு தாயான நான், என்னுடைய மகள்கள் படங்களில் நடிக்க, விரும்பினால் தவறு என்று சொல்லமாட்டேன்.
இதை வாரிசு ஆதிக்கம் என்று கூறுவதை நான் விரும்பவில்லை. ஒருவருடைய விருப்பத்தையோ, வாய்ப்புகளையோ தடுப்பது சரியல்ல’’ என்கிறாா் மதுபாலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.