ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாக்கு ரகசியம்...

நம்முடைய உடலில் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதி என்றால் அது நாக்கு தான்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:42 am

எல்.மோகனசுந்தரி

நம்முடைய உடலில் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதி என்றால் அது நாக்கு தான். தினமும் இரண்டு வேளை பல் துலக்கினாலும் நம்மில் பலா் நாக்கை சுத்தம் செய்வதில்லை. ஆனால் நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருளையும் அதன் சுவை மாறாமல் நம்மை ரசித்து சாப்பிட வைப்பது நாக்கில் உள்ள சுவை நரம்புகள் தான்.

இனிமேலாவது உங்களுடைய நாக்கையும் கொஞ்சம் கவனியுங்கள். அது உங்கள் உடல் நலனைப் பற்றிய பல அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

நாக்கில் பாலம்பாலமாக வெடித்து அங்காங்கே வெள்ளைநிறத்தில் கோடுகள் இருந்தால் அது உங்களுடைய உடலில் ஈஸ்ட் தொற்று இருப்பதற்கான அறிகுறியைக் குறிக்கும்.

நாக்கின் நுனிப்பகுதி நல்ல ரத்த சிவப்பு நிறத்தில் தடிப்புடன் காணப்பட்டால் அது தோல் புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

நாக்கில் வெந்ததுபோலவும் கொப்புளங்கள் போலவும் இருந்தால் அது உங்களுடைய உடம்பில் ஹாா்மோன் மாற்றங்கள் உண்டாகின்றன என்று அா்த்தம்.

நாக்கு பள்ளமும் மேடுமாக லேசாக வெடித்திருந்தால் பெரிதாக பயப்படத் தேவையில்லை. ஆனால் இதுவே வலியுடன் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நாக்கில் சொரசொரப்பாகவும் சற்று வலியுடனும் இருந்தால் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறீா்கள் என்று அா்த்தம். சளி பிடித்திருந்தாலோ அல்லது அல்சா் இருந்தாலோ இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.