டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓடிடி-யில் வெளியான முதல் தமிழ்ப்படம்

ஜோதிகா நடிப்பில் இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்! முதலில், நேரடியாக இணையத்தில் ஏன் இந்த படம் வெளிவந்தது என்பதை பார்ப்போம்! 

News image
Updated On :3 ஜூன் 2020, 2:23 pm

ரத்தினம் ராமசாமி


ஜோதிகா நடிப்பில் இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்! முதலில், நேரடியாக இணையத்தில் ஏன் இந்த படம் வெளிவந்தது என்பதை பார்ப்போம்! 

மார்ச் 25 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கரோனா காரணமாக ஊரடங்கை அரசு அறிவித்தது. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் எப்போது அவை திறக்கப்படும் என்பதும் உறுதியில்லை. இப்போது லாக்டவுன்-4ல் இருக்கிறோம். இது மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே, திரைப்படம் எடுப்பது ஒரு தொழில் என்ற முறையில் வேறு வழியின்றி இப்படத்தை இணையத்தில் வெளியிட சூர்யாவின் 2ஈ  நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு காட்டினார்கள். அதையும் மீறி சூர்யா இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இணையத்தில் அதாவது ஞபப தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது பற்றி சொல்ல வேண்டும். ஞபப என்பதன் விரிவு "ஞஸ்ங்ழ் பட்ங் பர்ல்". நேரடியாக நமது ஆண்ட்ராய்டு ஃபோன், அல்லது டிவியில் இணையம் மூலம் வெளியிடுவது. சாதாரணமாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பல மாதங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகே தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் மூலம் பிற ஊடகங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு வெளிவரும்.

(திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்று சட்ட அனுமதி இல்லாமல் வெளியிடப்படுவது வேறு கதை. அதை விட்டு விடுவோம்.)

இந்த இணைய தொழில்நுட்ப வெளியீடு பற்றி சில வரிகள். மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்தது முதல் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையோ, ஊடகத்தையோ மக்களிடம் கொண்டு போகாமல் வணிக நோக்கில் தடுப்பது இயலாத செயல். சினிமா வரலாற்றில் முதன்முதலில் ஊமைப்படம், பின்னர் பேசும்படம், வண்ணப்படம், 70எம்எம்,  சினிமாஸ்கோப், 3ஈ படம் போன்ற பரிமாண வளர்ச்சி இருப்பதுபோல் திரைஊடக வரலாற்றிலும் திரைஅரங்குகள், தொலைக்காட்சி, பின்னர் விசிஆர், சிடி வரிசையில் இப்போது வந்துள்ள ஞபப என்ற இணைய வெளியீடும் ஒரு பரிமாண வளர்ச்சிதான். அந்த வகையில் இப்படம் சினிமா ஊடக வரலாற்றில் ஒரு திருப்புமுனைப் படமாகும்.

ஆயினும், எந்த புதிய ஊடக கண்டுபிடிப்பாலும் திரையரங்குகள் மறைந்து போகாது என்று சொல்வார்கள். ஆனால், வெள்ளித்திரையில் பார்த்து மகிழ்வதற்கு மாற்று எதுவும் இல்லை என்பதை ரசிகர்கள் ஆதரவு நிரூபித்துள்ளது. 

இந்த படம் அமேசான் பிரைம் மூலம் வெளியிடப்பட்டது. இணையத்தில் அமேசான் பிரைம் நிறுவனத்துக்கு சந்தா கட்டியவர்கள் இப்படத்தை பார்க்கலாம். நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி போன்ற மற்ற  பிற இணைய ஊடகங்களும் இத்துறையில் இயங்கி வருகின்றன. இப்போது 2020 மே-29 இப்படம் இணையம் மூலம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இப்படத்தை தமிழில் திரைப்படங்கள் வெளிவராத ஃபிஜித் தீவு போன்ற உலகின் சிறிய தீவுகளில் உள்ள ரசிகர்களும் பார்த்து இணையத்தில் அப்போதே பதிவு செய்து விட்டனர்.

"பொன்மகள் வந்தாள்' திரைப்பட விமர்சனத்துக்கு வருவோம். இயக்குநர் ஜேஜே ஃபிரெடரிக்கின் அறிமுகப்படம் இது.  இதன் மையக்கருத்தாக மூன்று ஜீனர்களை குறிப்பிடலாம். முதலாவது நீதிமன்ற விசாரணை, அடுத்தது பெண்களை மையமாகக் கொண்டது, மூன்றாவது மனித உணர்ச்சி. 

படத்தின் கதை 2004-இல் ஊட்டியில்  ஒரு சைக்கோகில்லர், வடநாட்டுப்பெண் பல சிறுவர்களை கடத்தி, கொன்று புதைத்து வைத்ததை போலீசார் கண்டு பிடித்து அப்பெண்ணை சுட்டுக்கொலை செய்து விடுகிறார்கள் என்பது செய்தி. அந்த வழக்கை 16 ஆண்டுகளுக்கு பிறகு 2020-இல் வழக்கறிஞர் வெண்பா மீண்டும் ஆரம்பித்து நடத்துகிறார். அந்த வழக்கின் முடிவு என்ன என்பதே முழு திரைக்கதை. 

"பில்லா', "ரங்கா' காலம் தொட்டு நடந்து வரும் சிறுவர் கொலை கதைதான். சமீபத்திய அசீஃபா, நந்தினியைத் தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவங்கள் வரை "பெண் குழந்தைகளை சீரழிப்பது' (எண்ழ்ப் இட்ண்ப்க் அக்ஷன்ள்ங்) பற்றி இதில் இடம்பெறும் வசனமே பேசுகிறது.

படத்தின் கதாநாயகி ஜோதிகா. "36 வயதினிலே', "ராட்சசி' வரிசையில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் கதாநாயகன் இல்லை. வில்லன்கள், குணச்சித்திரப் பாத்திரங்கள் உண்டு. காதல் காட்சிகள், சண்டை, நகைச்சுவை போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை.

இதில் ஜோதிகா பண்பட்ட  அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளிக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை கதையை சுமந்து செல்பவரும் அவர்தான். இதில் வழக்கறிஞர் வேடத்தில் வரும் பார்த்திபன் தனக்கே உரிய முத்திரையைப் பதிக்கிறார். "மனிதன்' படத்தில் வரும் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜை இந்த பாத்திரத்துடன் இணைத்து நினைத்து பார்க்கலாம். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னையில் வந்து வாதாடியதும் நினைவுக்கு வருகிறது. அஜீத்தின் "நேர்கொண்ட பார்வை' படத்தில் வருவதுபோல் அதிகமான நீதிமன்ற காட்சிகள் நிறைந்த படம். ஆரூர்தாஸ் வசனத்தில் வந்த "விதி' படமும் நீதிமன்றக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.
ஆனாலும், 107 டிகிரி வெய்யில் பட்டையை கிளப்பும் இந்த மே மாதத்தில் குளுகுளு ஊட்டிக்கு நாம் நேரில் போக முடியா விட்டாலும் ஊட்டி காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. தமிழ் கவிஞர்களில்  பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை என்று  சொல்லப்படுவதுபோல் இதில் வரும் நடிகர்களை இயக்குநர் பாரதிராஜா பரம்பரை நடிகர்கள் என்றும் வகைப்படுத்தலாம். பாரதிராஜாவின் சீடர் பாக்யராஜ், பாக்யராஜின் சீடர் பாண்டிய ராஜன், பாண்டியராஜனின் சீடர் பார்த்திபன் என்று முத்திரைப் பதித்த மூன்று தலைமுறை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் பிரதாப் போத்தன் நீதிபதியாக வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல்வாதி வரதராஜனாக நடிகர் தியாகராஜன், போலீஸ் டிஎஸ்பியாக சுப்புபஞ்சுவும் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப துறைகளில் ராம்ஜி - சினிமாட்டோகிராஃபர், ரூபன்- எடிட்டிங். இருவரும்  ஒரு திகில் க்ரைம் கதைக்கு ஏற்ற வகையில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். "வா செல்லம்', "கலைகிறதே கனவே' உட்பட ஐந்து பாடல்கள் கோவிந்த் வசந்தா இசையில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் கதைக்கருவை ஒட்டியதாக பின்னணியில் பாடப்படுகின்றன.

நீதிமன்றத்தில் ஜோதிகா வழக்கறிஞராக வாதாடும்போது, "ஒரு படி அரிசி திருடியதற்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த நாடு இது. ஆனால், பல நூறு பெண்களை நாசம் செய்தவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள்', என்று  பேசும் வசனம் நெஞ்சைத் தைக்கிறது.

தமிழ்ப்பெண்ணின் வீரம் பழங்காலத்தில் இருந்தே பேசப்படுகிறது. தன் கணவனை "கள்வன்' என்று தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் அரசவையிலேயே சென்று,"தேரா மன்னா' என்று வாதாடி வெற்றி பெற்றவர் கண்ணகி. அந்த வரிசையில் ஜோதிகா நீதிக்காக போராடி வெற்றி பெறுகிறார்.

இந்த ஊரடங்கு நாட்களில் அறுபது நாட்களுக்கு மேலாக பழைய திரைப்படங்களையும், டிவி சீரியல்களையும் மீண்டும் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் "பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு வரப்பிரசாதம். 

அனைவரும் ஒருமுறை பார்க்கலாம். குறிப்பாக ஆண்களும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் தவறாமல் பார்க்க வேண்டும். 

ஒரே ஒரு எச்சரிக்கை 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் இப்படத்தை பார்ப்பது அவர்கள் மனதை பாதிக்கலாம். மற்றபடி அனைவரும் பார்க்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.