பெண்கள் படித்ததால்  விவாகரத்து அதிகரிக்கிறதா?

பெண்கள் படித்ததால் விவாகரத்து  அதிகரித்துவிட்டது என்கின்றனர் ஒரு தரப்பினர்.  இது உண்மையா? என்ற கேள்விக்கு கிடையாது என்கிறது 2019-இல் நடந்த ஆய்வு.
பெண்கள் படித்ததால்  விவாகரத்து அதிகரிக்கிறதா?
Updated on
1 min read


பெண்கள் படித்ததால் விவாகரத்து அதிகரித்துவிட்டது என்கின்றனர் ஒரு தரப்பினர். இது உண்மையா? என்ற கேள்விக்கு கிடையாது என்கிறது 2019-இல் நடந்த ஆய்வு.

1988-இல் 1000 பேருக்கு 0.5 சதவிகிதம் விவாகரத்துகள் நடந்தன. ஆனால், 2019-இல் 1000 பேருக்கு 13 சதவிகிதமாக உள்ளது என்றாலும் இந்தியாவில் மிக குறைந்த விவாகரத்தே தற்போதும் நடந்து வருகிறது. இது 1சதவிகிதம் என்ற அளவில்தான் உள்ளது.

மொத்த ஜனத் தொகையில் 0.11 சதவிகிதம் விவாகரத்து செய்துள்ளனர். அதேசமயம், பிரிந்தவர்கள் என்ற அடிப்படையில் எண்ணிக்கை மூன்று பங்கு கூடுதலாக 0.29 என உள்ளது.

திருமணமானவர்களில் 31 சதவிகிதத்தினருக்குத் தங்கள் கணவர்களால் திட்டுதல், அடித்தல், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தல் என கொடுமைகள் தொடருகிறது.

கணவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கணவரின் முரட்டுத்தனத்தால் கண் பாதிப்பு, கை, கால் முறிவு, மூட்டு விலகுதல், நெருப்பு காயங்கள், பல் உடைப்பு என பல ஏற்படுகின்றன. இவர்களில் 14 சதவிகித பெண்கள் மட்டுமே, உதவியை நாடி இவற்றிற்கு முடிவை கொண்டு வருகின்றனர்.

சரி விவாகரத்து அளவுக்கு வரும்போது, அது இரு பக்க சம்மதத்துடன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்துக் கொள்ளும் நிலையில் 8 மாதத்தில் முடிவுக்கு வந்துவிடுகிறது.

இதுவே சொத்து... ஜீவனாம்சம்... குழந்தைகளுக்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது போன்ற பல பிரச்னைகள் இருக்குமானால், விவாகரத்து வழக்கு முடிய 7 ஆண்டுகள் வரை ஆகின்றன. இதற்கு செலவு 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. விவாகரத்திற்குப் பிறகு கூட பல பெண்களுக்கு, உண்மையில் நிம்மதி கிடைப்பதில்லை. இதுவே நிதர்சனம். ஆகவே, விவாகரத்தை தடுத்து சுமூக வாழ்வுக்கு முயலுவோம். அதே சமயம் உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிடாமல் நிலைநாட்டிக் கொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com