புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கட்டு கதைகளை நம்ப வேண்டாம்!

"கனா காணும் காலங்கள்', "கல்யாணம் முதல் காதல் வரை', "லட்சுமி வந்தாச்சு', "பிரியமானவள்' போன்ற தொடர்களில் நடித்துள்ளவர் ஹரிப்ரியா.

News image
Updated On :10 மார்ச் 2020, 3:23 pm

ஸ்ரீ

"கனா காணும் காலங்கள்', "கல்யாணம் முதல் காதல் வரை', "லட்சுமி வந்தாச்சு', "பிரியமானவள்' போன்ற தொடர்களில் நடித்துள்ளவர் ஹரிப்ரியா.

சின்னத்திரை நடிகையாக தனது பணியை தொடங்கிய இவர், தற்போது "கண்மணி' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இவர், சின்னத்திரை நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விக்னேஷ் "வாணி ராணி' தொடரில் கௌதம் கேரக்டரில் நடித்தவர்.

இவர் தற்போது "பொன் மகள் வந்தாள்' தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது பிரிந்துள்ளனர். இந்நிலையில், ஹரிப்ரியா சன் டிவியில் காலை ஒளிப்பரப்பாகும் "வணக்கம் தமிழா' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கு ஹரிப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளார், ""அசார் எனது நல்ல நண்பர் அவ்வளவுதான் அவருடன் காதல் என்பதெல்லாம் யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிடும் கட்டுக்கதை. இதை யாரும் நம்ப வேண்டாம்'' என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.