நெகட்டிவ் கேரக்டர் ரசித்தேன்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் "மௌனராகம்'. இத்தொடரில் ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் ஜனனி அசோக்குமார்.


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் "மௌனராகம்'. இத்தொடரில் ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் ஜனனி அசோக்குமார்.
இவர் கூறுகையில், ""2010- இல் மீடியாவுக்குள் வந்தேன். கோயம்புத்தூர் என் பூர்வீகம், பள்ளி படிப்பு முடிந்ததும். அங்கிருந்த லோக்கல் சேனல்கள் பலவற்றில் வீ.ஜேவாக இருந்தேன். அதன்பிறகு மாடலிங் பக்கம் வந்தேன். பின்னர் படிப்படியாக சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து நடிக்கத் தொடங்கினேன். இதற்கிடையே எனக்கு சின்ன வயதிலிருந்தே விஜய் டிவி தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக முயற்சி செய்யும்போதுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான "மாப்பிள்ளை' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொகுப்பாளினி வாய்ப்பு கேட்டால், நடிகையாகும் வாய்ப்பு கிடைக்க அதிர்ச்சியாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்போது சீரியல் நடிகையாக இத்தனை ஆண்டுகளை கடந்து விட்டேன். நான் எப்பவுமே மற்றவர்களில் இருந்து தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். இதற்காகவே டிரஸ் விஷயத்தில் ரெம்பவே மெனக்கெடல் இருக்கும். அதற்கு தகுந்தமாதிரி என் அம்மா ஃபேஷன் டிசைனர் என்பதால் நான் கல்லூரி படிக்கும்போதே , ஒரு நாள் போட்ட டிரûஸ அடுத்த நாள் போட்டது கிடையாது.
ஆரம்பத்தில் பாஸிட்டிவ்வான கேரக்டர்களில்தான் நடித்து வந்தேன். "செம்பருத்தி' தொடரில் "படையப்பா' ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு ரோல்ன்னு சொன்னாங்க, அதனால உடனே ஒத்துக்கிட்டேன். பாஸிட்டிவ் கேரக்டரில் இருந்ததைவிட நெகட்டிவ் கேரக்டருக்கு வந்த பிறகுதான் "ரெஸ்பான்ஸ்' அதிகம் இருந்ததை உணர்ந்தேன். அதன்பிறகுதான், நெகட்டிவ் கேரக்டரை ரசித்து நடிக்கத் தொடங்கினேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...