சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார் தரண்சியா. இவர், பாட்டில்களில் ஓவியங்களை வரைந்து அதனைவிற்று, அதன் மூலம் கிடைத்த ரூபாய் 25 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அளித்துள்ளார்.
தரண்சியா,பிரபல "பிளேபாய்' பத்திரிகையின் புகைப்பட கலைஞரும், ஓவியருமான எல்.ராமச்சந்திரனின் மகளாவார். இது குறித்து தரண்சியா கூறியதாவது:
""அப்பா வரையும் ஓவியங்களை பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான். அதனால் சிறுவயதிலேயே எனக்கும் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டு, 7 வயதில் இருந்தே ஓவியங்களை வரைந்து வருகிறேன்.
அப்பாவைப் போன்று தனித்துவமான ஓவியங்கள் வரைய வேண்டும் என்பதுதான் எனக்கும் ஆசை. இதற்காக வழக்கமாக வரையும் கேன்வாஸ் ஷீட்களை பயன்படுத்தாமல் வேறு எதில் வரையலாம் என்று யோசித்தபோது, வேஸ்ட் பொருள்களில் ஓவியம் வரையலாம் என்று தோன்றியது. இதனால் பாட்டில்களில் ஓவியம் வரைய முயற்சித்தபோது, நன்றாக வந்தது. அதனால் கடந்த ஓராண்டாக பாட்டில் ஓவியம் வரைந்து வருகிறேன்.
அப்பா எப்போதும், எங்கள் பகுதியில் உள்ள வறுமையில் இருக்கும் மக்களுக்கும், படிக்க வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நிறைய உதவிகள் செய்து வருவார். அதுபோன்று தற்போது ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் வசதியற்ற மக்களுக்கும், அப்பாவிடம் பணிபுரியும் திருநங்கைகளுக்கும் அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து உதவி செய்து வந்தார்.
அதைப்பார்த்தபோது, எனக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதனால் குப்பையில் தூக்கி ஏறியும் மது பாட்டில்களை சேகரித்து அதில் ஓவியம் வரைந்து அப்பாவிடம் கொடுத்து என் எண்ணத்தை சொன்னேன். உடனே அப்பா, அம்மா இருவருமே அவர்களது நண்பர்கள் சிலருக்கு விற்றனர். அதன்மூலம் ரூபாய் 25 ஆயிரம் கிடைத்தது.
அதை கரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்து வழங்கினோம். இதை அறிந்து எல்லாரும் பாராட்டுகிறார்கள். இதனால் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


