மருதாணி அழகிற்கானது மட்டுமல்ல, அது ஏராளமான மருத்துவ குணம் கொண்டது. இதையறிந்துதான் நம் முன்னோர்கள் இதனை பல விதத்திலும் பயன்படுத்தி வந்துள்ளனர். மருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று பார்ப்போம்:
மருதாணி அடிக்கடி வைத்துக் கொண்டால் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம். மருதாணி நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்குகளின் மூலம் உருவாகும் விஷக் கிருமிகளை அழிக்கிறது.
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். அதுபோன்று அடிக்கடி மருதாணி வைத்து கொள்பவர்களுக்கு மனநோய் ஏற்படுவதில்லையாம்.
மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் பூசி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் மறையும்.
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர போன்ற அனைத்திற்கும் மருதாணி நல்ல மருந்தாகும். அதுபோன்று மருதாணியை அரைத்து குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடிக்கும் என்ற பயம் உள்ளவர்கள். மருதாணி இலைகளோடு சேர்த்து 7-8 நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் சளித் தொந்தரவு இருக்காது.
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் எரிச்சல் வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


