கரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..

வீட்டு சுற்றுப்புறத்தில்  வேப்பிலை,  மஞ்சள்  கலந்த நீரை தெளிக்கலாம்.தினமும் காலையில்  வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு  கலந்து  வாய் கொப்பளிக்க  வேண்டும்.
கரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..
Updated on
1 min read


வீட்டு சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம்.

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

கை கழுவுவதற்கு மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் சேர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும். தொண்டை காயாமல் இருக்க வெந்நீர் அருந்தலாம்.

வீட்டில் சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை, வெண் கடுகு, ஓமம், பூண்டு தோல் கலந்து புகை போடலாம்.

வேப்பிலை, யூகலிப்டஸ் தைலம் அல்லது நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் நலம்.

காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகுவது நல்லது.
சூடான பாலில் மிளகு, மஞ்சள் சேர்த்து இரவில் அருந்த வேண்டும்.

தினமும் மாலையில் சுக்கு, கொத்துமல்லி கலந்த பானம் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருக வேண்டும்.

சிறு தானியங்களான கேழ்வரகு, சாமை, தினை குதிரைவாலி, வரகு ஆகியவற்றை உணவாக சமைத்து சாப்பிடவும்.

கசப்பு சுவையுள்ள சுண்டைக்காய், பாகற்காய், வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம் செய்து சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி கலந்த பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருமே தினமும் ஒரு ஐந்து நிமிடம் வேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மூக்கு, தொண்டையில் உள்ள கரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும்.

பயறு வகைகளான ஜிங்க் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, கொண்டைக்கடலை போன்றவற்றை சுண்டலாக மாலையில் சாப்பிடலாம்.

தினமும் காலை 10 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்கு பிறகும் பதினைந்து நிமிடம் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும்.

நெல்லியில் விட்டமின் "சி' சத்து அதிகம் உண்டு.

கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மூலிகை தேநீர் பொடியில் துளசி, இலவங்கப்பட்டை, சுக்கு, மிளகு கொண்டு பொடி செய்து தயாரித்து தேநீர் பொடியுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம்.

மிளகு ரசம், தூதுவளை ரசம், எலுமிச்சை ரசம், இஞ்சி ரசம் சாப்பிட நோய் எதிர்ப்பு உருவாகும்.

மணத்தக்காளி, முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நலம்.

துதுவளை தோசை, கோதுமை ரவை, உப்புமா, கோதுமை கிச்சடி, மாப்பிள்ளை சம்பா அரிசி இட்லி சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

தமிழ்நாடு சித்த மருத்துவத்துறை வெளியிட்ட தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com