வரலாற்று மங்கையர்கள்!
பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் வரலாறு படைத்த மங்கையர்கள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்:


பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் வரலாறு படைத்த மங்கையர்கள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்:
அஸ்பாஸியா : பண்டைய கிரேக்க பண்டிதை இவர். கி.மு.470-கி.மு.400களில் வாழ்ந்தவர். பெண் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பெறும் இவர். சொற்களைக் கையாளுவதில் வல்லவர், பேச்சுக் கலையைப் போதித்தவர்.
முரோசாகி சிகிபு: பண்டைய ஜப்பானில் வாழ்ந்த மிகச் சிறந்த பெண் எழுத்தாளர் இவர். இவரது ஜின்ஜோ மனோகதாரி என்ற நாவல் உலகப் புகழ் பெற்றது. 53 புத்தகங்களாக 400க்கும் மேற்பட்ட பாத்திரங்களுடன் எழுதப்பட்டது. நான்கு தலைமுறை நிகழ்ச்சிகளை விளக்குவது.
ஜோன் ஆஃப் ஆர்க்: பிரான்சு நாட்டு விடுதலை வீராங்கனையான இவர், ஐந்தாம் போப் ஆண்டவரால் இறைத் தூதர் என்று அறிவிக்கப்பட்டவர். சார்லஸ் மன்னனுக்கு முடிசூட்டியவர். இவர் தமது சாதனைகளால் மக்கள் இதயங்களில் இன்றும் வாழ்பவர்.
சாரினா காதரைன்: "மாபெரும் காதரைன் என வரலாறு புகழும் இவர் மிகவும் சாதுரியமானவர். கற்றறிந்த அறிஞர்களின் நட்பைப் பெற்றவர். ரஷ்யப் பேரரசை விரிவாக்கிப் பலவிதங்களில் முன்னேற்றம் அடையச் செய்தவர்.
பேரரசி டோவாகர் சிக்சி: மஞ்சு யாகா நாரா இனத்தைச் சேர்ந்தவர் இவர். ஒரு சாதாரணப் பெண்மணியாக அரண்மனையில் நுழைந்தவர், தமது திறமையால் படிப்படியாக உயர்ந்து தனது கணவரின் இறப்புக்குப் பிறகு, மஞ்சு சிங் வம்ச ஆட்சியின் நடைமுறை ஆட்சியாளராக 48 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவர். இவருடைய நீண்ட, நெடிய ஆட்சியில் சீனாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருந்தவர்.
(பானுமதி தருமராசன் எழுதிய " வரலாறு படைத்த வைர மங்கையர்' எனும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...