மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இட்லி மிருதுவாக இருக்க...

இட்லி மென்மையாக வராமல் பாடாய்ப்படுத்தினால் கொள்ளை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து இட்லிமாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வார்த்தால் இட்லி புசுபுசுவென கிடைக்கும்.

News image
Updated On :8 டிசம்பர் 2021, 12:30 am

DIN

இட்லி மென்மையாக வராமல் பாடாய்ப்படுத்தினால் கொள்ளை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து இட்லிமாவுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வார்த்தால் இட்லி புசுபுசுவென கிடைக்கும்.

இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமையைச் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல மென்மையாக இருக்கும்.

இட்லி ஊற்றும்போது கரண்டியை மாவில்விட்டு அடிவரை கலக்காமல் மேலாக லேசாக கலந்து ஊற்ற இட்லி மிருதுவாக வரும்.

வெளியூர் போகும்போது இட்லியை மிளகாய்ப்பொடி தடவி எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி எடுத்துச் செல்லும்போது இட்லிமீது லேசாக தண்ணீர் தெளித்துவிட்டுப் பிறகு மிளகாய்ப் பொடியில் தோய்த்து எடுத்துப் போனால் இட்லி வறண்டு காய்ந்து போகாமல் நல்ல சுவையானதாக இருக்கும்.

குக்கர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவாமலேயே இட்லிகள் எடுக்க இட்லித் தட்டுகளைக் கழுவி எண்ணெய் தடவாமல் மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்தபின் தட்டுகளைக் கவிழ்த்து பிடித்து அதன் மேலே தண்ணீரை ஊற்றவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு இட்லிகளை எடுத்தால் ஒரு சிறுதுளி கூட ஒட்டாமல் வந்துவிடும்.

இட்லி மாவு புளித்து விட்டால் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர்விட்டு சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் நீர் மேலே தெளிந்து நிற்கும். அதை வடித்துவிட்டால் புளிப்பு போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.