திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

காலிஃப்ளவர்  வடை 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். காலிஃ ப்ளவரின் தண்டை நீக்கிப் பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியை அரை டம்ளர் தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:30 pm

தேவையானவை:

காலி ஃப்ளவர் - 1
உரித்த பட்டாணி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
மைதாமாவு - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தக்காளிப்பழம் - 5
உப்பு, எண்ணெய் - தேவையானவை
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். காலிஃ ப்ளவரின் தண்டை நீக்கிப் பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியை அரை டம்ளர் தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு நறுக்கி வைத்துள்ள காலிஃ ப்ளவரையும் பட்டாணியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கொத்துமல்லியை கிள்ளிப் போட்டு அதனுடன் வெங்காயம், மிளகாய்ப் பொடி, தக்காளி சாறு, மைதாமாவு, உப்புப் பொடி ஆகியவற்றைப் போட்டு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கலந்துள்ள கலவையை சிறிய வட்டமான வில்லைகளாகத் தட்டிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.