காலிஃப்ளவர் ஜவ்வரிசி  போண்டா

ஜவ்வரிசியை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலிஃப்ளவரின் தண்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
காலிஃப்ளவர் ஜவ்வரிசி  போண்டா
Updated on
1 min read


தேவையானவை:

பெரிய ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
கடலைமாவு - 1 தேக்கரண்டி
காலிஃப்ளவர் - 1
இஞ்சி - 1 துண்டு
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானவை
எண்ணெய் - தேவைக்கேற்ப
சமையல்சோடா - 1 சிட்டிகை

செய்முறை:


ஜவ்வரிசியை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலிஃப்ளவரின் தண்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்க வேண்டும். ஜவ்வரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம், காலிஃப்ளவர் , இஞ்சி மூன்றையும் பாத்திரத்தில் போட்டு ஜவ்வரிசி, கடலைமாவு, மிளகாய்ப் பொடி, சோடா உப்பு, உப்பு முதலியவற்றை நன்றாகப் பிசைந்து சற்று நேரம் வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் பிசைந்ததை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com