காதலரை கரம்பிடிக்கும் நடிகை!
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் "வாணிராணி' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையானவர் நட்சத்திரா நாகேஷ்.


சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் "வாணிராணி' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையானவர் நட்சத்திரா நாகேஷ். பின்னர், மாடலிங், குறும்படங்கள், வெப்சீரிஸ், சீரியல்கள், பெரியதிரை என படிப்படியாக வளர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார் நட்சத்திரா.
தற்போது, "வஞ்சகன்' மற்றும் துல்கர் சல்மானுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வரும் நட்சத்திரா, சில நாள்களுக்கு முன்பு தன் காதலர் ராகவை சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து நட்சத்திரா கூறுகையில்,""ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ராகவ் என்னுடைய ஸ்கூல் சீனியர். பள்ளியில் நடைபெற்ற நாடகம் ஒன்றில் நடித்தபோது ராகவ் எனக்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருக்கிறோம். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்குப் பக்கபலமா இருந்திருக்கிறார். வெளிநாட்டில் படிப்பு முடித்து இப்போது பிசினஸ் செய்து வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் கூட. "தியேட்டர்காரன்' என்ற பெயரில் நிறைய விழிப்புணர்வு நாடகங்கள், வீதி நாடகங்களை அவ்வப்போது செய்வார்.
நான் நிறைய பேசிட்டே இருப்பேன். ராகவ் கொஞ்சம் அமைதி. ஆனா, ரொம்ப ஸ்மார்ட். மனுஷங்ககிட்ட ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் ஒவ்வொருத்தரையும் மரியாதையாக நடத்தணும் என்பதில் ரொம்ப உறுதியாக இருப்பார். என்னை நல்லா புரிஞ்சுகிட்ட நண்பன்.
வீட்டில் திருமண பேச்சு எடுத்தப்போது, வாழ்க்கைத்துணை பத்தி யோசிக்க ஆரம்பித்தபோது, ராகவை விட என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாரும் இல்லை என்று தோன்றியது. அதே உணர்வு ராகவுக்கும் இருக்க, ரெண்டு பேரும் காதலைப் பரிமாறிக் கொண்டோம்.
இன்ஸ்டாகிராமில் ராகவுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எல்லோரும் வாழ்த்து சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. ரசிகர்கள் நிறைய அன்பை எனக்குக் கொடுத்துகிட்டே இருக்காங்க. இனி ராகவுக்கும் அதே அன்பு கிடைக்கும் என நம்புகிறேன். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி''
என்றார்.
இந்நிலையில் சமீபத்தில், நட்சத்திரா மற்றும் ராகவின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. ஆனால், திருமண தேதியை இன்னும் தெரிவிக்கவில்லை இந்த ஜோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...