எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆச்சரியமான சகோதரிகள்..!

"ஐ ஏ எஸ்' அதிகாரி ஆவது  பலரது லட்சியம். என்றாலும்  பெரும்பாலானவர்களுக்கு "ஐ ஏ எஸ்'  வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது.

News image

ஆச்சரியமான சகோதரிகள்..!

Updated On :3 பிப்ரவரி 2021, 9:29 am

"ஐ ஏ எஸ்' அதிகாரி ஆவது பலரது லட்சியம். என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு "ஐ ஏ எஸ்' வெறும் கனவாகவே இருந்துவிடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஐ ஏ எஸ் ஆவதே குதிரைக் கொம்பாக இருக்கும் போது ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரிகள் ஐ ஏ எஸ் ஆனதுடன், பல கால இடைவெளிகளில் ஒரே மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணி புரிந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

மீனாட்சி, ஊர்வசி , கேஷினி தான் அந்த அபூர்வ சகோதரிகள்.

""அப்பா ஜெகதீஷ் சந்தர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் பேராசிரியராகப் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தவர். எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவரும் அவரே. நாங்கள் மூவரும் ஐ ஏ எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்பது அவரது விருப்பம். நாங்களும் அப்பா வழியில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடம் படித்தோம். பல்கலைக்கழகத் தேர்வுகளில், பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தில் முதல் மாணவிகளாகத் தேறினோம். ஐ ஏ எஸ் தேர்விலும் அந்த பாடத்தையே தேர்ந்தெடுத்து படித்தோம். சகோதரிகளில் யாரும் தனியாகப் பயிற்சி வகுப்புகளுக்குப் போகவில்லை.

ஒருவர் பின் ஒருவராக ஐ ஏ எஸ் தேர்வின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகி, அப்பாவின் கனவை நனவாக்கினோம்.

எங்களை ஹரியாணா பிரிவில் சேர்த்தார்கள். மூத்த தமக்கை மீனாட்சி 1969 -இல் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். இரண்டாம் தமக்கை ஊர்வசி ஐஏஎஸ் அதிகாரி ஆனது 1975 -இல். நான் 1983- இல் ஐஏஎஸ் அதிகாரி ஆனேன்.

மீனாட்சி ஹரியாணா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக 2005-இல் பணி ஓய்வு பெற்றார். ஊர்வசி தலைமைச் செயலாளராகப் பணி மூப்பு பெற்றது 2012 -இல். கேஷினியான நான் ஹரியாணாவின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றது சென்ற ஆண்டு (2019 ) தான். அடுத்த ஆண்டு பணி ஓய்வு'' என்கிறார் கேஷினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.