வெண்ணெய் நல்லதா?
பசு வெண்ணெய் 100 கிராம் சாப்பிட்டால் 729 கலோரி சக்தி உடலுக்கு கிடைக்கும். அதிக நல்ல கொழுப்பு, ஒமேகா 6 இருப்பதால் உடல் வலுவடையும்.


பசு வெண்ணெய் 100 கிராம் சாப்பிட்டால் 729 கலோரி சக்தி உடலுக்கு கிடைக்கும். அதிக நல்ல கொழுப்பு, ஒமேகா 6 இருப்பதால் உடல் வலுவடையும்.
பசு வெண்ணெய்யில் வைட்டமின் ஏ இருப்பதால் பார்வை குறைபாடு, கண் நோய் நீங்கும்.
வெண்ணெய்யில் வைட்டமின் பி12 உள்ளதால் ரத்த சோகை ஏற்படாது. மேலும், உடல் எரிச்சலையும் குறைக்கும்.
வெண்ணெய்யில் அடங்கியுள்ள கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கிறது. மேலும் வயோதிகத்தினால் வரக்கூடிய எலும்பு நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.
அதிக பசி எடுப்பவர்கள் வெண்ணெய் கலந்த உணவோ அல்லது பட்டர் டீயோ எடுத்துக் கொண்டால் பசி குறையும்.
வறண்ட சருமத்தில் வெண்ணெய்யைப் பூசுவதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வெடிப்பு போன்றவை மறையும்.
எடை குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுக்கலாம்.
காசநோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...