எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஓவியத்தில் கின்னஸ் சாதனை!

நுண்கலைகளில் ஓவியத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

News image
Updated On :30 ஜூன் 2021, 12:02 pm

நுண்கலைகளில் ஓவியத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. வண்ணங்கள் குழைத்து தீட்டப்படும்ஓவியரின் எண்ணங்கள், கருத்துகள், காண்போரின் கண்கள் வழியாகச் சென்று மனதில் பதிந்துவிடும் அதிசயம் ஓவியக் கலைக்கு மட்டுமே உள்ளது. ஓவியங்களில் பல வகைகள் உள்ளன. அதன் ஒரு மேலைநாட்டு வடிவம்தான் "டூடுல்' ஓவியம். இந்த ஓவியக் கலை மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மோனிஷா ரவி.தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உலியம் பாளையத்தைச் சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இளம் வயதில் இருந்தே ஓவியத்தின் மீதும் தடகளத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் மோனிஷா, தற்போது ஓவியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் சாதனைகள் புரியத் தொடங்கியிருக்கிறார். அவரிடம் பேசுவோம்:

""சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எனக்கு இந்தத் திறமை இருப்பதை அறிந்த பெற்றோர் என்னை தொடர்ந்து ஊக்குவித்ததுடன் எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். இதைத் தொடர்ந்து தலைவர்களின் ஓவியங்கள், கண்ணாடி ஓவியம், முட்டை ஓவியங்களை வரையத் தொடங்கினேன்.

ஓவியத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை அடுத்து கடந்த ஆண்டில் 50 முட்டைகளில் தலைவர்களின் படத்தை ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் 59 விநாடிகளில் வரைந்து, இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தேன்.

இதற்கிடையே, "டூடுல்' ஆர்ட் எனப்படும் ஓவியங்களை வரைய கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தேன். அதில் சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதை அறிந்தேன். டூடுல் ஆர்ட் பிரிவில் 12 மணி நேரத்தில் 5,395 சதுர அடி பரப்பளவில் ஓவியங்கள் வரைந்ததே இதுவரை உலக சாதனையாக இருப்பதை அறிந்தேன். அதை முறியடிப்பதற்காக தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தேன்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து 13 மணி நேரத்தில் 6057.92 சதுர அடி பரப்பளவில் மலர்களின் ஓவியங்களை வரைந்தேன். இதை 4 நடுவர்கள் முன்னிலையில் கின்னஸ் விதிகளின்படி விடியோவில் படம் பிடித்து அனுப்பி வைத்திருந்தேன். அனுப்பிய மூன்று மாதங்களிலேயே எனது சாதனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கரோனா காரணமாக அதற்கான சான்றிதழ் தற்போதுதான் கிடைத்துள்ளது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து கிராமத்தின் ஏதோ ஒரு மூலையில் வசித்து வரும் நான் இந்த சாதனையை படைத்திருக்கிறேன் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். இதற்காக எல்லா தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இவை என்னை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளன.

எம்.பி.ஏ. முடித்து ஒரு நல்ல வேலைக்குச் செல்வதே இப்போதைய லட்சியமாக உள்ளது. அதேநேரம் ஓவியத்தில் நான் இன்னும் பல சாதனைகளைப் படைக்க
வேண்டும் இதற்காக முறையாக ஓவியம் கற்கத் தொடங்கியிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.