சின்னத்திரை மின்னல்கள்!: சின்னத்திரையை விட்டு விலகும் நடிகை!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, "சரவணன் மீனாட்சி' தொடரின் இரண்டாம் பாகம் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரச்சிதா.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, "சரவணன் மீனாட்சி' தொடரின் இரண்டாம் பாகம் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரச்சிதா. பின்னர், பல தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது, "நாம் இருவர் நமக்கு இருவர்' இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தத் தொடரைவிட்டு விலகுவதாக அண்மையில் அறிவித்திருக்கிறார் ரச்சிதா.
சில மாதங்களாகவே, தொடரில் ரச்சிதாவின் காட்சிகள் குறைந்து வந்தன. இதற்கு காரணம், ரச்சிதா கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில், அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரச்சிதா கலந்துகொண்ட புகைப்படங்களை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது ரச்சிதா நாம் இருவர் சீரியலுக்கு குட்பை சொல்லும் விதமாக, அவர் தமது இன்ஸ்டாகிராமில் பை மஹா' என பதிவிட்டிருக்கிறார்.மற்றொரு பதிவில் தன்னுடைய இருப்பும் இல்லாமையும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருந்த ரச்சிதா, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது கஷ்டமாக இருந்தாலும் இது ஒரு ஃபிக்ஷன் கேரக்டர் தானே.. என்றும் ரசிகர்களுக்கு சமாதானம் கூறினார்.
இந்நிலையில், "அரண்மனைக்கிளி' தொடரில் நாயகியாக நடித்த மோனிஷா இனி புதிய மகாவாக நடிக்கப் போவதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...