நடனம் ஆட வந்து பாடகி ஆனவர்!
ஜமுனா ராணி என்ற பெயர் சொன்னதும் "புன்னகை மன்னன்.. பூவிழிக் கண்ணன்..' பாட்டுதான் ஞாபகத்திற்கு வரும்.


ஜமுனா ராணி என்ற பெயர் சொன்னதும் "புன்னகை மன்னன்.. பூவிழிக் கண்ணன்..' பாட்டுதான் ஞாபகத்திற்கு வரும்.
அவர் பல தமிழ், தெலுங்குப் படங்களில் இனிமையாகப் பாடியிருக்கிறார். ஆனால், அவர் சினிமா உலகில் நுழைந்தது பின்னணி பாடுவதற்காக அல்ல! நடனம் ஆடுவதற்காகத்தான். சிறு பெண்ணாக நாடகங்களிலும் தனியாகவும் நடனம் ஆடி வந்த அவர், "தீனபந்து', "ஜீவன்முக்தி', "வால்மீகி', "கருட கர்வபங்கம்' ஆகிய தெலுங்குப் படங்களில் நடனம் ஆடியிருக்கிறார். ஆனால், அவரது மெலிந்த தேகத்திற்கு நடன அதிர்ச்சியைத் தாங்கி கொள்ளும் சக்தி இல்லாததால் நடனத்தை நிறுத்திவிட்டு பின்னணி பாடத் தொடங்கினார். அவர் பாடிய முதல் படம் - "தாசில்தார்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...