

கீழாநெல்லி கீரை வகையைச் சேர்ந்தது. அனைத்து சுவைகளும் இக்கீரையில் அடங்கியுள்ளது.
புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் இதில் அடங்கியுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் தன்மை கொண்டது இக்கீரை.
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு தகுந்த மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை.
கீழா நெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து பதினொரு நாள்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பரிபூரணமாக குணமாகும்.
பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதும். உப்பு, காரம், புளிப்பை தவிர்க்க வேண்டும்.
பத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேக நோயால் அவதிப்படுபவர், இதை நன்றாக அரைத்து, பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
தாதுபலம் இழந்து, மனம் மற்றும் முகவாட்டத்துடன் தளர்ச்சியாகியிருக்கும் கண்கள், இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாள்கள் உண்டுவர, இழந்த உயிர்சக்தியை மீட்டு எடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.