

சின்னத்திரையின் பிரபல தொடர்களில் ஒன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இத்தொடர் தமிழ் ரசிகர்களைத்தாண்டி, தெலுங்கில் "வடிநம்மா', கன்னடத்தில் "வரலட்சுமி ஸ்டோர்ஸ்' என தென்னிந்திய மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. சுமார் 8 மொழிகளில் இத்தொடர் ஒளிபரப்பாவதே இத்தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தெரிவிக்கிறது.
இத்தொடரைப் பொருத்தவரை ரசிகர்களை கவர்ந்ததில் முக்கியகாரணமாக இருந்தவர்கள் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் ஆரம்பத்தில் முல்லையாக, நடிகை சித்ரா நடித்து வந்தார். அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததால், அவருக்கு பதிலாக, "பாரதி கண்ணம்மா'வில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா முல்லையாக நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் காவியாவுக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், போகப் போக ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில், காவியா "பாண்டியன் ஸ்டோர்' தொடரில் இருந்து விலகவுள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காவியா, தொடரில் இருந்து விலகுவது குறித்து
அதிகார பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

27 நட்சத்திரங்களே படிகளாக...

”தில்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்!” டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

