நமீதாவின் சமூக அக்கறை!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ் சீசன் -5' நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் திருநங்கை நமீதா மாரிமுத்து.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ் சீசன் -5' நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் திருநங்கை நமீதா மாரிமுத்து. கலந்து கொண்ட ஒரு சில நாளிலேயே தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டதன் மூலம், சக போட்டியாளர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் ஆதரவை பெற்றார் நமீதா. எனவே, பிக்பாஸ் வீட்டில் ஒரு முக்கிய போட்டியாளராக நமீதா இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார்.
இதற்கு காரணம், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சைப் பெற வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், சிகிச்சை முடிந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் நமீதா, தனது முதல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நலதிட்ட உதவிகள் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே சமூக அக்கறை, நல திட்டங்கள் குறித்து பேசியவர் தற்போது அதற்கான செயலிலும் ஈடுப்பட தொடங்கிவிட்டார்.
இதன் மூலம் நமீதாவின் அறப்பணிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...