கொள்ளுக் கார அடை
கொள்ளு, அரிசி இரண்டையும் 4-5 மணி நேரம் ஊற வைத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


தேவையானவை:
கொள்ளு - 2 கிண்ணம்
அரிசி - கால் கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
உடைத்த உளுந்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - 1 சிறு துண்டு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கொள்ளு, அரிசி இரண்டையும் 4-5 மணி நேரம் ஊற வைத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர், தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து மாவில் சேர்க்கவும். கொள்ளுக் கார அடை ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...