கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தர்பூசணி!

தர்பூசணியில் நீர் சத்துகள் அதிகம் இருப்பதால்   கோடைக்காலத்தில்  வெயிலினால் ஏற்படும் உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது.

Published On :

தர்பூசணியில் நீர் சத்துகள் அதிகம் இருப்பதால் கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும்உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது.

அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. மேலும், தர்பூசணியில் அதிக அளவு நீர்தான் இருக்கிறது. கலோரியானது குறைவாகவே, இருக்கிறது. எனவே இது எடையை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பிபிஉள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம். பிபி படிப்படியாக குறையும்.

ரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது. மற்ற பழங்களில்இல்லாத பைட்டோ நியூட்ரியன்சத்துகள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியில் சிட்ருலின் எனும் புரதச்சத்து இருப்பதால், இதுஉடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது இருதயக் கோளாறுகளையும் சரிசெய்கிறது.

தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துகள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.

தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

இந்தப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.