மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தக்காளி இடியாப்பம்

இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கி, இடியாப்ப மாவில் கொட்டிக் கிளறி, இடியாப்பச் சூழலில் மாவை வைத்து இடியாப்பமாக உதி

News image
Updated On :3 மே 2022, 5:06 pm

தேவையானவை:

தக்காளி - 200 கிராம்
இடியாப்ப மாவு- 2 கிண்ணம்
பச்சைப் பட்டாணி- 3 மேஜை கரண்டி
துருவிய கேரட்- 2 மேஜை கரண்டி
கரம் மசாலாத் தூள்- 2 மேஜை கரண்டி
குட மிளகாய்- பாதியளவு 
(நீளமாக மெலிதாக நறுக்கவும்)
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 3 மேஜை கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கி, இடியாப்ப மாவில் கொட்டிக் கிளறி, இடியாப்பச் சூழலில் மாவை வைத்து இடியாப்பமாக உதிர்த்துவிடவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய  குடமிளகாயை வதக்கி, பச்சைப் பட்டாணி கேரட் துருவல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கி நன்கு சுருண்டு வந்ததும் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும். உதிர்ந்த இடியாப்பத்தை இதனுடன் சேர்த்து கலந்துவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.