வெல்லம் பால் கொழுக்கட்டை

வாணலியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும். வெல்லம் முழுமையாகக் கரைந்தவுடன் வடிகட்டவும்.
வெல்லம் பால் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள்:

எண்ணெய்-  3 தேக்கரண்டி
காய்ச்சிய பால்- 1 கிண்ணம்
வெல்லம்- 1 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி- அரை தேக்கரண்டி
சுக்குப் பொடி- 1 தேக்கரண்டி
அரிசி மாவு- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்

செய்முறை: 

வாணலியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும். வெல்லம் முழுமையாகக் கரைந்தவுடன் வடிகட்டவும்.  பால் காய்ச்சி தனியே எடுத்து வைக்கவும். அரிசி மாவில் சிறிது எண்ணெய், உப்பு, சூடான தண்ணீர் ஊற்றி வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் கொதிக்க வைக்கவும். அதில் ஏளக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்கும் தண்ணீரில் மாவு உருண்டைகளைப் போட்டு,  சில நிமிடங்கள் வேக வைக்கவும்.  அதனுடன் காய்ச்சிய பாலையும் வெல்லத்தையும் கலக்கவும். 

அரிசி மாவு ஒரு தேக்கரண்டியை எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும். இந்த மாவுக் கரைசல் கடைசியாகப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்பு சிறிது நேரத்தில் தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com