முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுபட வெந்தயம் நல்ல மருந்தாகிறது. வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள்காலையில் தண்ணீரை வடித்து விட்டு பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து உச்சந் தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரத்திற்கு 2 முறை செய்து வர முடி உதிரும் பிரச்னை தீர்ந்து கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.
முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும் படி தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர பொடுகுத் தொல்லை நீங்கிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் அருகே தாயைப் பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சோ்ப்பு
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

காங்கிரஸை எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


