பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சின்னத்திரை மின்னல்கள்!: பன்முக திறமைபெற்றவர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாவம் கணேசன்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார் விலாசினி.  இவர்,  ஆர்.ஜே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,  பாடகி என பன்முக திறமைக் கொண்டவர்.  

News image
Updated On :19 ஜனவரி 2022, 12:30 am

ஸ்ரீ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாவம் கணேசன்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார் விலாசினி. இவர், ஆர்.ஜே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி என பன்முக திறமைக் கொண்டவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினரும் ஆவார்.

விலாசினிக்கு திரையுலகில் பாடகியாக வேண்டும் என்பதே விருப்பம் "பிரியாணி' திரைப்படத்தில் ஒரு சில வரிகள் பாடியும் இருக்கிறார்.

ஆனால் தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்பு கிட்டாததால், சில காலம் ஆர்.ஜே.வாக பணியாற்றினார். அதன்பிறகு, ஆதித்யா தொலைக்காட்சியில் சில காலங்கள் வி.ஜே.வாகவும் இருந்தார். அதன்பிறகு, படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.
இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியின் "பாவம் கணேசன்' தொடரின் மூலம் நடிகையானார். விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், தனது இணையபக்கத்தில் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோ சூட் புகைப்படங்கள் மூலம் தற்போது இணைய உலகிலும் பிரபலமாகி வருகிறார் விலாசினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.