பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெற்றிப்  பொட்டு  சில டிப்ஸ்...

சாந்து பொட்டு  வைக்கும்போது பொட்டு வைத்த பிறகு முகப்பவுடர்  பூசிக் கொண்டால்  முகம் பளிச்சென தோற்றமளிக்கும்.  குங்குமப் பொட்டு இடும்போது  பவுடரை  முதலில்  பூசி விட்டு பிறகு பொட்டு  வைக்க வேண்டும்.

News image
Updated On :19 ஜனவரி 2022, 12:30 am

நெ. இராமன்

சாந்து பொட்டு வைக்கும்போது பொட்டு வைத்த பிறகு முகப்பவுடர் பூசிக் கொண்டால் முகம் பளிச்சென தோற்றமளிக்கும். குங்குமப் பொட்டு இடும்போது பவுடரை முதலில் பூசி விட்டு பிறகு பொட்டு வைக்க வேண்டும்.

குறுகிய நெற்றியை உடையவர்கள் சிறிய பொட்டும், விசாலமான நெற்றியுடைய பெண்கள் பெரிய பொட்டும் வைத்துக் கொள்வது எடுப்பாய் இருக்கும்.

வட்ட முகமுள்ளவர்கள் நீள வடிவிலும், நீண்ட முகமுடையவர்கள் வட்ட வடிவிலும் பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.

சிவந்த நிறமுடைய பெண்கள் கருநிறப் பொட்டும், மற்ற பெண்கள் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறப் பொட்டும் இட்டால் அழகாக இருக்கும்.

நெற்றியில் பொட்டிட்ட பிறகு அதன் ஈரம் காய்வதற்குள் அதற்கென உள்ள ஜிகினாப் பொடியை மேலே தூவிவிட்டுக் கொண்டால் அழகாக இருக்கும்.

ஸ்டிக்கர் பொட்டை ஒரு நாளைக்கு மேல் உபயோகிக்க கூடாது. ஒரே பொட்டை பல நாட்கள் வைத்தால் தோல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நெற்றியில் ஒரே இடத்தில் தினமும் பொட்டு வைக்காதீர்கள். மேல், கீழ், வலது, இடது என அவ்வப்போது சிறிது நகர்த்தி வைத்தால் பொட்டு வைப்பதால் ஏற்படும் தோல் அலர்ஜி ஏற்படாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.