தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பனங்கிழங்கு பாயாசம்

பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல் உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும்.

News image
Updated On :26 ஜூன் 2022, 10:59 am

DIN

தேவையானவை:

பனங்கிழங்கு-4
தேங்காய்ப் பால்- ஒரு கிண்ணம்
பனை வெல்லக் கரைசல்- அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்- சிறிதளவு
முந்திரி, திராட்சை- தலா ஒரு தேக்கரண்டி
நெய்- ஒரு தேக்கரண்டி

செய்முறை: 

பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல் உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து அடி பிடிக்காது சில நிமிடங்கள் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து கொதி வருகையில் இறக்கவும்.  சற்றே சூடு தணிந்தவுடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.