

தேவையானவை:
கடலைப் பருப்பு - கால் கிண்ணம்
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
தனியா - 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சர்க்கரை - 1 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
இன்ஸ்டென்ட் புளி - 1 தேக்கரண்டி
பூசணி, பீன்ஸ், கொத்தவரங்காய், கத்திரிக்காய் கலவை - 1 கிண்ணம்
பச்சைமிளகாய் - 2
நிலக்கடலைப் பருப்பு - கால்
செய்முறை:
கடலைப்பருப்பு , துவரம் பருப்பு இரண்டையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் கடலைபருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு இவைகளை எண்ணெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டு தேங்காயையும் சேர்த்து, நீர்விட்டு நன்றாய் அரைத்துக் கொள்ளவும். பின்னர், பாத்திரத்தில், 2 கிண்ணம் தண்ணீர் விட்டு நிலக்கடலையை வேகவிடவும். பின்னர் அதனுடன் சிறுதுண்டுகளாக நறுக்கிய காய்களைச் சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும், புளி கரைசல், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர், வேக வைத்த பருப்புகளை மசித்து சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து இறக்கி விடவும். கொத்துமல்லித் தழை இருந்தால் தூவலாம். புளிக்கூட்டு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

