

தேவையானவை:
கத்தரிக்காய் - 1 பெரியது
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - முக்கால் தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - 4
சர்க்கரை - 1 தேக்கரண்டி
புளி - அரை தேக்கரண்டி
செய்முறை:
கத்தரிக்காயை நீள வாக்கில் இரண்டாக நறுக்கி அடுப்பில் சுட்டு எடுக்கவும். அடுப்பில் 4 நிமிடம் வைத்து, காயைத் திருப்பி விட்டபடி 4 நிமிடம் வேகவிடவும். காய் நன்றாய் வெந்து போகும். ஆறினதும் ஸ்பூனால் உள்ளிருக்கும் காயை வரண்டி உள் சதையை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி இவைகளைப் பொடியாக நறுக்கி வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எடுத்து வைத்துள்ள கத்தரிக்காயைப் போட்டு, கரண்டியால் நன்றாய் மசித்துவிடவும். அதிகம் தண்ணீர் விடக்கூடாது. கெட்டியாகவே இருக்க வேண்டும். இதே மாதிரி காயை சுடாமல் பொடிப் பொடியாய் நறுக்கி எண்ணெய் அதிகம் விட்டு, வதக்கியும் செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ

கா்நாடகம்: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சா்களுக்கு முதல்வா் உத்தரவு

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

