பாகற்காய் பிட்லை
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும். பாகற்காயை சிறுதுண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து நீர் வடித்துக் கொள்ளவும்.


தேவையானவை:
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
புளி - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - கால் கிண்ணம்
மிளகாய் வற்றல் - 10
நிலக்கடலை - கால் கிண்ணம்
ஜீரகம் - கால் தேக்கரண்டி
தனியா - 1மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பாகற்காய் - பெரியது 2
கறிவேப்பிலை- சிறிது
செய்முறை:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும். பாகற்காயை சிறுதுண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து நீர் வடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு தனியா, கடலைப் பருப்பு, மிளகு, ஜீரகம், வெந்தயம், மிளகாய் வற்றல் வறுத்து எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதே வாணலியில் புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், நிலக்கடலைப்பருப்பு இவைகளை கொதிக்க விடவும். பின்னர், வேக வைத்த பாகற்காய் அதில் சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், வேக வைத்து மசித்த பருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து ஒன்றாக கலந்து நன்கு கொதிக்கும்போது, கடுகு , கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். பாகற்காய் பிட்லை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...