கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்ட்ராபெர்ரி நன்மைகள்!

தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன.

News image
Updated On :16 மார்ச் 2022, 12:30 am

ஏ. காந்தி

தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், ஸ்ட்ரா பெர்ரி பழத்தில்  இருக்கும் சத்துக்கள் பற்றி அறிந்து கொள்வோம்:

பொதுவாக ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை  தடுக்கும் தன்மை சில குறிப்பிட்ட பழங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் ரத்த  சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். அந்த வகையில், செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருள்கள் ஸ்ட்ராபெர்ரியில் ஏராளமாக நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருள்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய  ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபெளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின்,  பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.

250மிலி அளவில்  உள்ள  ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றில் 40 கிராம் அளவு கலோரி சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன.

ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும்,  நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 10, உரித்த ஆரஞ்சு சுளைகள் 10, பழுத்த  நாட்டு வாழைப்பழம் 4, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து தேவையெனில் நெல்லிக்காய் சாறு 10 மில்லி கிராம் சேர்த்து நன்கு அரைத்து பழச்சாற்றை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.  தேவையெனில் சற்று நீர் சேர்த்து இளக்கமாக அரைக்கலாம்.  இந்தப் பழச்சாறில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.  இந்தப் பழச்சாறு அருந்துவதால், தோல் வறட்சி நீங்குவதுடன், இதிலுள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன. மேலும்,  ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும்  இதற்கு உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.